புலி படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் புலி. நாளொரு தினமும் ஒவ்வொரு சாதனையை படைத்து வரும் புலி படத்தின் டிரெய்லர் தற்போது இந்தியாவிலேயே அதிகம் விரும்பப்பட்ட டிரெய்லராக மாறியுள்ளது.
யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெறுவது எப்படி ஒரு ட்ரெண்டோ அதே போல் அதிக லைக்குகள் பெறுவதும் தற்போது போட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில் இதுவரை இந்திய அளவில் அதிகம் விரும்பப்பட்ட டிரெய்லராக அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் முதலிடத்தில் இருந்தது. பாலிவுட்டின் கிங் கான்களான சல்மான், ஷாருக், அமீர் கான் படங்களுக்குக் கூட இந்த அதிக லைக்குகள் பெறும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் என்னை அறிந்தால் படமும், புலி படமும் இப்போது இந்திய அள்வில் அதிகம் விரும்பப்படும் டிரெய்லர்களாக முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இதில் புலி 70, 932 லைக்குகளைப் பெற்று முதலிடத்திலும், 66,760 லைக்குகளுடன் என்னை அறிந்தால் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. அஜித், விஜய் ரசிகர்கர்களின் போட்டிகள் இந்திய அளவிற்கு விரிந்து வருகிறது என்பதே உண்மை.
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon