இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் டிரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. 'புலி' டிரைலர் வெளியாகி 12 மணி நேரமே ஆகியுள்ள நிலையில் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இன்னும் 12 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் என்ற அளவை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலக வரலாற்றில் ஷங்கரின் 'ஐ' திரைப்படம் மட்டுமே 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்துள்ளது. இந்த சாதனையை 'புலி' டிரைலர் முறியடித்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'ஐ' படத்தின் டிரைலருக்கு மொத்தம் 53568 லைக்குகள் கிடைத்துள்ளது. ஆனால் 'புலி' டிரைலருக்கு வெறும் 12 மணி நேரத்தில் 42275 லைக்குகள் கிடைத்துள்ளதால் இந்த படத்தின் டிரைலர் லைக் விஷயத்தில் ஒரு புதிய சாதனையை படைக்கும் என கூறப்படுகிறது.
இதுவரை வெளியான வெளியான டிரைலரில் 'ஐ' படம் மட்டுமே 8.85 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதல் இடத்திலும் கோச்சடையான் டிரைலர் 4.66 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு படங்களின் எண்ணிக்கையை முறியடிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் மிக வேகமாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இன்னும் ஒரு சில நாட்களில் 'புலி' டிரைலர் முதல் இடத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது. (7,185,413 VIEWS)
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon