சென்னை,
‘புலி’ படத்தின் கதை இணையதளத்தில் வெளியாகவில்லை என்று டைரக்டர் சிம்புதேவன் கூறினார்.
‘புலி’ படம்
விஜய்-சுருதிஹாசன் ஜோடியாக நடித்துள்ள படம், ‘புலி’. ஹன்சிகாவும் இன்னொரு கதாநாயகியாக வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங், இசைக்கோர்ப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்த படத்தின் டிரைலர் இணையதளங்களில் அனுமதியில்லாமல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார். பின்னர், ‘புலி’ பட புகைப்படங்களும் அனுமதியில்லாமல் வெளியானதாக குற்றம்சாட்டப்பட்டது.
18 நிமிட வீடியோ
செப்டம்பர் 17-ந்தேதி ‘புலி’ படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் ‘புலி’ படத்தின் 18 நிமிட வீடியோ இணையதளங்களில் வெளியாகிவிட்டதாகவும். இதன்மூலம் கதை எல்லோருக்கும் தெரிந்துவிட்டதாகவும் செய்திகள் பரவின.
விஜய், நந்திதா கதாபாத்திரங்கள் என்ன?, நந்திதா திடீரென இறந்தபிறகு விஜய் என்ன முடிவு எடுக்கிறார்?, விஜய், சுதீப் இடையே நடக்கும் மோதல், ராணி ஸ்ரீதேவியிடம், விஜய் படைவீரராக எப்படி சேர்கிறார் என்பன போன்ற கதைகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது.
விளக்கம்
இதற்கு டைரக்டர் சிம்புதேவன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
“புலி’ படத்தின் கதை பற்றிய வீடியோ இணைய தளங்களில் வெளியாகிவிட்டதாக வந்த தகவல் பொய்யானது. ‘புலி’ படத்தின் வீடியோ எதுவும் வெளியாகவில்லை ‘புலி’ படத்தின் கதை என்ற பெயரில் இணையதளங்களில் வந்துள்ள கதையும் முழுக்க முழுக்க கட்டுக்கதைதான். விஜய் ரசிகர்கள் யாரும் இதனை நம்பவேண்டாம்”.
இவ்வாறு சிம்புதேவன் கூறியுள்ளார்.

Sign up here with your email
1 comments:
Write commentsPULI
ReplyConversionConversion EmoticonEmoticon