1967-ல் கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி, பின்னர் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்-ரஜினி இணைந்து நடித்த மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து பாரதிராஜாவின் 16 வயதினிலே மற்றும் வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை படங்கள் மூலம் பிரபல நடிகையானார். ஆனால் தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்று விளங்கியபோது இந்திக்கு சென்றவர் பின்னர் தமிழுக்கு வரவேயில்லை. முழுநேர இந்தி நடிகையாகி திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டிலாகி விட்டார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு 18 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்துவந்த ஸ்ரீதேவி, இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் சாதாரண அளவிலேயே ஓடியது. இருப்பினும், ஸ்ரீதேவிக்கு பாகுபலி உள்பட சில படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிச்சென்றது. ஆனால் அவர் சம்பள விசயத்தில் கறாராக இருந்ததால் பாகுபலி உள்பட சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார்.
இந்த நேரத்தில்தான் விஜய்யின் புலி படத்தில் ஒரு ராஜ்ஜியத்தின் மகாராணியாக நடிக்கும் வேடம் அவருக்கு கிடைத்தது. அதோடு அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுத்து நடிக்க வைத்துள்ளனர். அதனால் மனம் கோணாமல் முழுஈடுபாட்டுடன் புலியில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அதோடு இந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என்பதால் இதன்பிறகு தென்னிந்தியாவில் மீண்டும் தனது மார்க்கெட் சூடுபிடித்து விடும் என்று எதிர்பார்க்கும் ஸ்ரீதேவி, டுவிட்டரில் இதுவரை தனது பெயரை ஸ்ரீதேவி போனிகபூர் என்று வைத்திருந்தவர் இப்போது ஸ்ரீதேவி புலி கபூர் என்று மாற்றியுள்ளார்.
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon