
விஜய் தன் படத்தில் நடனமாட அழைத்தால், நிச்சயம் போவேன் என்ற நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
சிம்பு, டுவிட்டரில் தனது ரசிகர்கள் மூலம் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு, சிம்பு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.
நடிகர் விஜய்யை, என் படத்தில் நடிக்க அழைப்பது நியாயமாக இருக்காது. ஆனால், அவர் படத்தில், என்னை நடனமாட அழைத்தால் நி்ச்சயம் போவேன்.
தல படம் இந்த தீபாவளிக்கு வந்தால், இது நம்ம ஆளு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும், அஜித் படம் வரவில்லையென்றால், இது நம்ம ஆளு, தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு்ள்ளோம்.
தனுஷ் நடிப்பிலான படங்கள் அனைத்தும் சிறப்பாக இருப்பதாகவும், இருந்தபோதிலும், காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆடுகளம் போன்ற படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும்.
நடிகர் சங்கம் குறித்த விவகாரத்திற்கு விரைவில் தீ்ர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது.
வேட்டை மன்னன் படப்பணிகள் தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. படம் குறித்த புதிய தகவல் வந்தால் உடனே தெரிவிப்பேன்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலான படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக சிம்பு கூறினார்.
இதுவரை தன்னை தல ரசிகர் என்று மட்டுமே கூறிவந்த சிம்பு, வாலு படத்திற்கு பிறகு, விஜய் மற்றும் அஜித் குறித்து பரவலாக பேசிவருவது குறிப்பிடத்தக்கது. விஜய் குறித்த டி.ராஜேந்தரின் பேச்சு, விஜய் - அஜித் ரசிகர்களிடையே பெரும்கருத்து மோதலையும் உருவாக்கியிருந்தது நினைவிருக்கலாம்.
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon