சில ஹீரோக்களுக்கு ஏ கிளாசில் அதிகப்படியான ரசிகர்கள் இருப்பார்கள். இன்னும் சிலருக்கு பி அண்ட் சியில் அதிக ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் விஜய்க்கு மட்டும் ஏபிசி என மூன்று சென்டர்களிலுமே அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அவரது படங்கள் எல்லா ஏரியாவிலுமே ஒரே மாதிரியாக வசூலித்து வருகின்றன. விஜய்யும், அதை கருத்தில் கொண்டு தனது படங்களின் கதைகளை ஏபிசி என பிரிக்க முடியாமல் மூன்று தட்டு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.அந்த வகையில், கடந்த சில வருடங்களாகவே அவர் நடிக்கும் படங்களின் பட்ஜெட்டுகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கேற்ப இந்தியா மட்டுமன்றி, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது விஜய் நடிப்பில் வெளிவரத் தயாராகிக்கொண்டிருக்கும் புலி படம் 100 கோடியில் தயாராகியிருக்கிறது. ஆனால் இந்த படம் 200 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.மேலும், இதற்கு முன்பு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள்தான் அவரது படங்களின் வசூலை உயர்த்தின. அதாவது துப்பாக்கி 120 கோடியும், கத்தி 150 கோடியும் வசூலித்தன. இந்த நிலையில், தற்போது தயாராகியுள்ள புலி இந்த சாதனைகளை முறியடித்து 200 கோடி வசூலிக்கும் என்று நினைக்கிறார்கள். அதற்கேற்ப, தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி, கன்னட நடிகர் சுதீப் நடித்திருப்பதால் கர்நாடகத்திலும் புலி படம் வசூலிக்கும். மேலும், ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன் நடித்திருப்பதால் வடஇந்தியாவிலும் புலி கூடுதலாக வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon