சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள "புலி" திரைப்படம், அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் இந்த படமும் வெற்றிப்படமாக அமையும்பட்சத்தில், அவர் டபுள் ஹாட்ரிக் படைத்த நடிகராக கருதப்படுவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை....
திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை கடந்துள்ள விஜய், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களால் இளையதளபதி என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் விஜய், வெற்றிப்படங்களுக்கு சமமாக தோல்விப்படங்களையும் அளித்துள்ளார்.
துப்பாக்கி, தலைவா, கத்தி படங்களை தொடர்ந்து, விஜய், சிம்புதேவனின் இயக்கத்திலான "புலி" திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதேவி, ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம், விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 17ம் தேதி வெளியாவதாக இருந்தது. படத்தில் இடம்பெற்றுள்ள அனிமேசன் மற்றும் கிராபிக்ஸ் பணிகள், விஜய்க்கு திருப்தியளிக்காததால், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக, புலி படத்தின் ரிலிஸ், அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கிராபிக்ஸ் பணிகளில் திருப்தியில்லாததாலேயே பட ரிலீஸ் அக்டோபருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள வெளியுலகிற்கு தெரிவிக்கப்பட்டாலும், விஜயின் சென்டிமென்ட்டும் ஒரு காரணம் என்று தகவலறிந்தோர் கூறுகின்றனர்.
விஜய் நடிப்பில வெளியாகி, பெரும்வெற்றி பெற்ற படங்கள் பெரும்பாலும் அக்டோபர் மாதத்திலேயே வெளியாகியுள்ளன. புலி படமும் அவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதனடிப்படையிலேயே, புலி படத்தின் ரிலீசை, அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற படங்கள்
சந்திரலேகா - அக்டோபர் 23, 1995
பிரியமானவளே - அக்டோபர் 26, 2000
திருமலை - அக்டோபர் 24, 2003
வேலாயுதம் - அக்டோபர் 26, 2011
கத்தி - அக்டோபர் 22, 2011
புலி - அக்டோபர் 01, 2015
விஜயின் நினைப்பு, அவருக்கு வெற்றியை தந்து டபுள் ஹாட்ரிக் படைக்கிறாரா அல்லது விஜய்க்கு எதிர்மறையாக அமைகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon